top of page
Search

கிணறு வெட்ட, பூதமா கிளம்பியது! பா.ம.க.வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி சோசியம் பார்த்தவர் கைது!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 9, 2024
  • 1 min read
ree


தமிழ்திரையுலகில், ஒளிப்பதிவாளரகவும், இயக்குநராகவும், வலம் வந்தவர் தங்கர்பச்சான். இவர் 2024. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கூட்டணியில்

கடலூரில், பாமக வேட்பாளராக பே ாட்டியிடுகின்றார்.


தேர்தல் பரப்புரையில் வாக்காளர்களை கவரும் விதமாக கிளி சோசியம் பார்த்தபடம் சமூக வலைதளங்களில் வைராலானது.

பா.ம.க.வேட்பாளர் தங்கர்பச்சான்

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைப் போல, அவருக்குகிளி சோசியம்பார்த்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.! இந்நிலையில், கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.!


கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் சாலை ஓரத்தில் நின்று இருந்த கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது.!

ree

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் மிகுந்த பரப்பரப்புடன் வெளியாகியுள்ளது.!

ஆக இதுதான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையோ!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page