திருமாவளவன் கேள்வி? கரூர் சம்பவத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அச்சப்படுகிறதா?
- உறியடி செய்திகள்

- Oct 4
- 1 min read

கரூர்: உயிரிழப்புகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா என்ற கேள்வியையும் வி.சி.க தலைவர் திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் சம்பவத்தில் அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம் சுமத்தி அதன் மூலம் அரசியல் செய்வதில் விஜய் குறியாக இருக்கிறார் என்பதைக் காண்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது" எனக் கூறினார்.
"கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக துளியும் வருத்தமோ, குற்ற உணர்வோ அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதால் அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் ககைகளில் சிக்கியிருக்கிறார் என்பதைக் காணும்போது கவலையளிக்கிறது" எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
கரூர் விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய திருமாவளவன், "அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு உள்ள முகாந்திரம் விஜய்க்கு இல்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் அரசு நியாயமான அணுகுமுறையுடன் நடந்து கொள்ளவில்லை" எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார்.
மேலும் கரூர் சம்பவ
, "இறப்புகளுக்கு விஜய்தான் பொறுப்பு என்பது தெளிவாக தெரிகிறது. சிலர் இறந்துவிட்டதாக கூறியபோதும் அதைக் காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார்" என்றுக் குற்றம் சாட்டியுள்ளார்
முதலமைச்சரை பலவீனமான நபராக காட்டுவதைத்தான் விஜய் விரும்புவதாகவும் , "தன்னை அரசுக்கும் மேலானவராக காட்டிக் கொள்ள வும் விஜய் முற்படுகிறார். அரசு பத்து லட்சம் அறிவித்தால் தான் 20 லட்சம் தரப் போவதாக கூறுகிறார்" என்கிறார்.
"ஆளும் அரசை பலவீனமானதாக தனது பேச்சில் காட்டுகிறார். தி.மு.க ஆட்சியின் அணுகுமுறையும் அதையொட்டியே இருக்கிறது. அவரைப் பார்த்து ஆளும்கட்சி பயப்படுவதாகவே அக்கட்சியின் தொண்டர்கள் பார்ப்பார்கள்" எனவும் ரவிக்குமார் கூறினார்.
" மேலும் இது அரசாங்கத்துக்கு பலவீனமானதாக முடியும்" " மாவட்ட நிர்வாகத்துக்கு பொறுப்பு எனக் கூற முடியாது. விஜயைத்தான் பொறுப்பானவராக வழக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும்" என்று கூறினார் .




Comments