top of page
Search

தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம்! ராகுல், சோனியா காந்தி, மல்லிகார் ஜீன கார்கேயும் வருகை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 9, 2024
  • 2 min read
ree


முக்கிய செய்தி அரசியல் தேர்தல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை கோவை, நெல்லையில் வரும் 12ம்தேதி ராகுல்காந்தி பிரச்சாரம்; இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வருகை

கோவை, நெல்லையில் வரும் 12ம்தேதி ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வருகை தர உள்ளனர். !


அதன்படி, கரூர், மயிலாடுதுறை, சிவகங்கையில் பிரியங்கா காந்தி வரும் 15ம்தேதி ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளார். 16ம்தேதி மல்லிகார்ஜூன கார்கே வருகை தருகிறார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை குறி வைத்து தேசிய தலைவர்களும் முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அந்தந்த கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.!

ree

எப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.!

பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் பலவற்றில் பங்கேற்று எழுச்சியுரையாற்றியும் வருகிறார்.!


தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்கள், ஆலோசனைகளின்படி

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர், துரைமுருகன் முதன்மைச்செயலாளர் கே.என், நேரு, உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.கழக துணைப் பொது செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என ஏராளமானோர் தேர்தல் களத்திலும் இறங்கியுள்ளனர்.!


இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை தருவதாக கட்சியின் வட்டார தகவல்களில் உறுதியாகியுள்ளது. !


ராகுல்காந்தி வரும் 12ம் தேதியும், அடுத்தடுத்து பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என தேசிய காங்கிரஸ் தலைவர்கள் என அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர். ரோடு ஷோ, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளதால் காங்கிரசார் உற்சாகமடைந்துள்ளனர்.!

ree

அதாவது, தேர்தல் பிரச்சாரத்துக்காக முன்னால்காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 12ம் தேதி தமிழகம் வர உள்ளார். அன்று திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென் மாவட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறுகிற ரோடு ஷோவிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. !


தொடர்ந்து அன்று மாலை கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பங்கேற்று பேசுகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் ஆகியோர் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.!

ree

இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழகம் வருகையும் உறுதியாகியுள்ளது. 15ம்தேதி காலை திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தரும் பிரியங்கா காந்தி. அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை, மயிலாடுதுறை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.!

இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்ய அவரது பிரச்சார திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.!


தொடர் நிகழ்வாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் வரும் 16ம்தேதி தமிழகம் வருகை தர உள்ளார். அவர் கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் செய்கிறார். !


காங்கிரஸ் தலைவர்களின் அடுத்தடுத்த பிரச்சாரம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவர்களின் சுற்று பயண விபரத்தை தமிழக காங்கிரஸ் தலைமை டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் டெல்லி தலைமை வெளியிடவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு பலத்த ஆதரவை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின்தேசிய தலைவர்கள் வருகையால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.!



 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page