மக்களவை தேர்தல் வெற்றி! கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Jun 4, 2024
- 1 min read

மக்களவை தேர்தல் தி.மு.கழக வெற்றியை முத்தமிழறிஞர் கலைஞருக்கு காணிக்கையாக அர்பணிக்கின்றோம்.
அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்.!
மேலும் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது.
தி.மு.கழககூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்!
. முத்தமிழறிஞர் கலைஞரை போலவே இந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி பெற்றுத்தந்த.அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.கழகம் தொடர்ந்து முன்னெடுக்கும். தி.மு.கழகத்தின் தேர்தல் வெற்றியை முத்தமிழறிஞர் கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்.!
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய பாஜகவால் பெரும்பான்மை இடங்களைக்கூட பெற முடியவில்லை.கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பாஜக கொடுத்தது. பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. மோடியின் எதிர்ப்பலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலவுகிறது. டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்” என கூறினார்.!.
முன்னதாக ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.!

ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளின் தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களில் 150 இடங்களுக்குமேல் பெற்று தெலுங்கு தேசம் கூட்டணியும், 25இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்தது. இதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமையவுள்ளது.!
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு , தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.!
இது குறித்து அவர் தனதுஎக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் கூறியிருப்பதாவது, மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற வாழ்த்துகள். ஆந்திர மாநிலத்திற்கு செழிப்பான முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.!




Comments