பாஜக கம்போஸ் செய்த பாட்டுக்கு நடனமாட ஒரு நடிகர் கிடைத்துள்ளார்! விஜய் மீது நடிகர் கருணாஸ் கடும் தாக்கு!
- உறியடி செய்திகள்

- Oct 23
- 2 min read

மக்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும் போது, உங்களில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்று சொல்லக்கூடியவர் தான் ஒரு தலைவர், தளபதி.. ஆனால் பனையூர் கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறதா இல்லை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை நீங்கள் தான் பார்க்க வேண்டும் என நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் தவெக கூட்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை விஜய் கரூருக்கு செல்லாததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என அதிமுக கூறி வரும் நிலையில், நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த கருணாஸ்
மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால்
விஜய் ஏன் இன்னும் கரூர் செல்லவில்லை என்ற கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். பனையூர் வீட்டின் கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறதா இல்லை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை நீங்க தான் போய் பார்க்க வேண்டும். மக்களுக்கான அரசியல் என்பது மக்களுக்கானது.. அந்த மக்களுக்கு பிரச்சினை என்கிற போது, அந்த அரசியலை செய்ய நினைப்பவர்கள், மக்கள் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தான்..

அந்த மக்களுக்கு ஒரு இடையூறு கஷ்டம் என்றால் அங்கு சென்று நிற்க வேண்டும். அப்படி நிற்க தவறியவர்களை நான் என்ன என்று சொல்வது.. இதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இது மக்களுக்கான பிரச்சினை என்கிறபோது, நள்ளிரவு நேரத்திலேயே அந்த இடத்துக்கு சென்று, அம்மக்களுக்கான தேவைகளை செய்ய வேண்டும். உங்களுக்கு நான் இருக்கிறேன்.
ஒரு FIR-க்கே தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்! தவெகவில் ஆதவ், நிர்மல்குமார் பதவியை கலைக்கும் விஜய்?
"ஒரு FIR-க்கே தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்! தவெகவில் ஆதவ், நிர்மல்குமார் பதவியை கலைக்கும் விஜய்?"
பாஜக பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்
உங்களில் ஒருவனாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லக்கூடியவர் தான் ஒரு தலைவர்.. ஒரு தளபதி என்று சொல்லலாம். அந்த இடத்திலேயே உடனடியாக சென்று மக்களுக்கு உதவியவர் முதல்வர் ஸ்டாலின் தான்" என்றார். சிபிஐ விசாரணைக்கு பின்னால் பாஜகவின் பின்புலம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ் கூறியதாவது:-
பாஜக என்றைக்கும் நேரடியாகவே எதிலேயும் வரமாட்டாங்க.. இந்த மாதிரி சந்தில சிந்து பாடி, எங்கேயாவது இப்படித்தான் பாட்டு கம்போஸ் பண்ண வேண்டும் என்று நினைப்பாங்க.. அவங்க கம்போஸ் பண்ணுற பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதற்கு ஒரு நல்ல நடிகர் கிடைத்து இருக்கிறார். அல்மோஸ்ட் பாட்டு தயாராகும் என்று நினைக்கிறேன்..
எடப்பாடி மீதும் கடும் விமர்சனம்
எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கி, ஜெயலலிதா பாதுகாத்து, எங்களை போன்றவர்களுக்கு அடையாளம் கொடுத்த கட்சி தான் அதிமுக.. ஆனால் இன்றைக்கு அவர்கள் நடத்துகின்ற கூட்டத்தில் அவங்க கொடியை பிடிக்காமல், இன்னொருத்தருடைய கொடியை பிடித்து ஆட்டுகின்ற அவல நிலையை பார்க்கின்றோம். இது எல்லாம் யாரால நடக்குது..

விஜய் வீட்டிற்கு போன.. டெல்லி லாயர்.. கூட்டுக்குள் மொத்தமாக அடையும் கிளி.. பயங்கர லாபி ஆரம்பம்!
"விஜய் வீட்டிற்கு போன.. டெல்லி லாயர்.. கூட்டுக்குள் மொத்தமாக அடையும் கிளி.. பயங்கர லாபி ஆரம்பம்! "
எடப்பாடி தலைமையில் நடக்கின்ற தான் ஏற்படுகின்ற அவல நிலை தான். எடப்பாடி பழனிசாமி பதவிக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பது இதன் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. தனக்காக ஒரு மாபெரும் இயக்கத்தினை எந்த வித கட்டமைப்பும் இல்லாத, காட்டாற்றை போல ஓடுகின்ற ஒரு ரசிகர் கூட்டத்தை நம்பி அவங்க கையில் இவங்களே செட் பண்ணி கொடியை ஆட்டிக்கொண்டு அவங்க இருக்காங்க.. இவங்க இருக்காங்க.. என்று சொல்வது இப்படி ஒரு அவலமான நிலையை நினைத்து அதிமுக தொண்டர்களே ஆதங்கப்படுகிறார்கள். இதற்கு எல்லாம் முதல் காரணம் எடப்பாடி தான்.. அவர் சுயநலத்துக்காக கட்சியை கூட அடகு வைத்துவிட்டு போய்விடுவார். இவ்வாறு அவர் பேசினார்.




Comments