சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவு! உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையிலா குட்டு? நையினார் கேள்வி!
- உறியடி செய்திகள்

- Oct 13
- 1 min read

கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு பரப்புரைபிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மருதுபாண்டியரின் ஜம்பு பிரகடனம் போன்று திமுக ஆட்சியை விரட்டி, பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க காரைக்குடியில் பிரகடனம் எடுப்போம்.

திமுக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது . காரைக்குடி நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ மாவட்டத் தலைவர் அனுமதி கேட்டார். ஆனால் காவல் துறை அனுமதி தரவில்லை. இதுகுறித்து ஒரு போலீஸ் உயரதிகாரியை தொடர்பு கொண்டேன். அவர் அழைப்பை கூட ஏற்கவில்லை.
திமுக ஆட்சியை நம்பி போலீஸ் அதிகாரிகள் தங்களது செயல்பாட்டை குறைத்து கொள்ள வேண்டாம். நியாயமான முறையில் நடக்கவில்லை என்றால் ஆட்சி மாற்றம் வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் நிகழ்ச்சிக்கு கேட்ட இடத்தில் அனுமதி கிடைக்கிறது. ஆனால் எதிர்கட்சிகள் கேட்ட இடத்தில் அனுமதி தருவதில்லை. அனுமதி மறுக்கப்பட்டதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தார்கள். மேலும், இந்த சம்பவம் குறித்து தமிழக அரசின் விசாரணை நியாயமாக இருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு அவர் பேசினார். மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற இந்த உத்தவு குறித்த பார்வையில்
தமிழக அரசின் தலையில் கொட்டு வைத்துள்ளதாக வே அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்புடன் பேசப்படுகின்றது.




Comments