ஈரோடு, கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Oct 17, 2023
- 1 min read

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா
ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டுவிழா! அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குறைகளையும் கேட்டறிந்து நடவடிக்கை!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் தி.மு.கழகத் தலைவர் மு .க . ஸ்டாலின் ஆலோசனைகள், அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக தலைமைக்கழக வழி காட்டல்களின்படியும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில், பொதுக்கூட்டங்கள், கவியரங்கம்.கருத்தரங்கம் பள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சு, இலக்கிய போட்டிகள், இளைஞர்களை உற்சாகமூட்டி ஊக்கபடுத்தும் வகையில் கராத்தே, உள்ளிட்ட பல்வேறு தொடர்நிகழ்ச்சிகளும், பொதுமக்களுக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டு வருகின்றது.


இந்நிலையில ஈரோடு மாநகர 49 வது வார்டு ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி நேரில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து மக்களின் குறைகள் அடிப்படை வசதி தேவைகளையும் கேட்டறிந்த அமைச்சர், சு.முத்துசாமி சம்மந்தபட்ட அரசு துறைசார்ந்த அதிகாரிகள் மூலம், உரிய, துரித நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.!

மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம்,பகுதி கழகச் செயலாளர், மற்றும் மாமன்ற உறுப்பினர் மண்டல தலைவர்கள் கழக மாநில ,மாவட்ட, மாநகர, பகுதி , வட்டக் கழகம், மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அணியினர் உட்பட , பலர் கலந்து கொண்டனர் .




Comments