உயர் நீதிமன்றம் தள்ளுபடி! முதுகலை பட்டதாரி பணியிடம்! தேர்வை தள்ளி வைக்க முடியாது!
- உறியடி செய்திகள்

- Oct 10
- 1 min read

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தள்ளி வைக்க முடியாது
தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே அக்டோபர் 12-ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை எனக் கூறி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் வெள்ளிக்கிழமை (10.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, தற்போதைய நிலையில் தேர்வை தள்ளி வைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசுத் தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறியதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வைத் தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.




Comments