கரூர்: பாதிக்கபட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க மாவட்ட எஸ்.பி,யை அணுகலாம்! டி.ஜி.பி. அலுவலகம் அறிவுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Oct 8
- 1 min read

கரூர் பாதிக்கபட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம். டி.ஜி.பி. அலுவலகம் அறிவுறுத்தல்!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்று 11 நாட்களாகிவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் அல்லது அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட கரூர் பக்கம் செல்லவில்லை.
இது அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.
விஜய் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று ஆறுதல் கூறினார்.
அப்போது, எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. என்று வருத்தப்பட்டதுடன் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் கரூர் சென்று மக்களை சந்திப்பதற்காக பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் ஆன்லைன் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். விஜய் சார்பில் தவெகவினர் இன்று நேரடியாக டிஜிபி அலுவலகம் சென்று, கரூர் சென்று மக்களை சந்திப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அனுமதி கேட்டு மனு அளித்தனர்.!

கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். கரூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எந்த தேதியில் அனுமதி கொடுத்தாலும் அன்று தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி அலுவலகத்திற்கு தவெக தரப்பினர் அனுமதி கோரி மின்னஞ்சல் அனுப்பி இருந்த நிலையில் டிஜிபி அலுவலகம் பதில் அளித்துள்ளது.!
"தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் எனவும் பயண விவரங்கள் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
"விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், வரும் வழி, நிகழ்ச்சி நிரல் விவரத்தை எஸ்.பி.க்கு சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களை அளித்த பிறகு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விஜய் கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை தவெக அணுகலாம்" என டிஜிபி அலுவலகம் பதில் அளித்துள்ளது.




Comments