கட்சிக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை! செங்கோட்டையன் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Oct 23
- 1 min read

நான் கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை மாறாக பத்து நாட்களுக்குள் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை ஊடகங்கள் தான் அதனை தவறாக போட்டுவிட்டனர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார்.

மேலும் இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை ஏதும் இல்லை நல்லதே நடக்கும் என பதிலளித்த அவரிடம் அதிமுக ஒன்றிணைய பத்து நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பவே நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர் என பதிலளித்தார். தொடர்ந்தது ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு அது உங்களின் கருத்து என்றுபதிலளித்து புறப்பட்டார்.




Comments