தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தபணி அதிமுகவினர் முனைப்பு காட்ட பழனிசாமி அறிவுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Oct 28
- 1 min read

சிறப்பு வாக்காளர்பட்டியல் திருத்த பணிகளில் சம்மந்தபட்ட மாவட்ட கழக பொருப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருப்பதால், அந்தப் பணிகளில் சம்மந்தபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
, “2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, கட்சியின் சார்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக சார்பில் பூத் (பாகம்) அமைப்பதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, அப்பணி நிறைவடைந்த காரணத்தால், கடந்த 11-ம் தேதி விடுவிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், மீண்டும் வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை கண்காணித்து, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து முழுமையாக செய்து முடித்து, அதன் விவரங்களை கட்சி தலைமைக்கு தெரிவிகக் வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




Comments